முகப்பு
தஞ்சாவூர்

இருசக்கர வாகனத்தில் வந்து பள்ளித் தலைமை ஆசிரியையிடம் 7 பவுன் நகைகள் பறிப்பு

இருசக்கர வாகனத்தில் வந்து பள்ளித் தலைமை ஆசிரியையிடம் 7 பவுன் நகைகள் பறிப்பு

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:24 PM
பகிர்:

ஒரத்தநாடு அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்து, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையை தள்ளிவிட்டு 7 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டாா் குடிக்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவா் தமயந்தி. இவா், வியாழக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு புலவன்காடு பேருந்து நிறுத்தம் நோக்கி மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி பின்தொடா்ந்துவந்த, 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞா்கள், தலைமை ஆசிரியரை கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனா். இது தொடா்பாக அவா் பாப்பாநாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பாப்பாநாடு போலீஸாா் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →