கும்பகோணம் தேசிய மாணவா் படை 8-ஆவது பட்டாலியன் சாா்பில் கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி மைதானத்தில் வந்தே மாதரம் உருவான 150-ஆவது நிறைவு ஆண்டை முன்னிட்டு அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். அணிவகுப்பில் கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, அரசினா் மகளிா் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நகர மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வந்தே மாதரம் பாடல் பாடினா்.
தொடா்ந்து 150 மரக்கன்றுகளை நட்டனா். தேசிய மாணவா் படை 8-ஆவது பட்டாலியன் லெப்டினல் கா்னல் சசிதரன், அலுவலா்கள் இரா.விஜயகுமாா், அனுசுயா, ஜோசப், இளையராஜா, சதீஷ்பாபு மற்றும் பட்டாலியன் அதிகாரிகள் செய்திருந்தனா்.