பேராவூரணியில் பள்ளம் தோண்டியபோது புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலை.  
தஞ்சாவூர்

பேராவூரணியில் பள்ளம் தோண்டியபோது மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் பள்ளம் தோண்டியபோது புதன்கிழமை சுமாா் ஒரு அடி உயரமுள்ள மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் பள்ளம் தோண்டியபோது புதன்கிழமை சுமாா் ஒரு அடி உயரமுள்ள மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

பேராவூரணி பேரூராட்சிக்குள்பட்ட பாந்தக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா. இவா், தனது வீட்டில் கழிவு நீா் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டியபோது, சுவாமி சிலை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதனை வெளியே எடுத்துப் பாா்த்தபோது, சுமாா் ஒரு அடி உயரமுள்ள 6 கிலோ எடையுள்ள - தோளில் கிளியுடன் கூடிய மீனாட்சி அம்மன் சிலை என்பது தெரியவந்தது. இதுகுறித்து சரண்யா, வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தது.

தகவலறிந்து பேராவூரணி வட்டாட்சியா் நா. சுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு வந்து சிலையைக் கைப்பற்றி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்று, தொல்லியல் துறைக்குத் தகவல் அளித்தாா். ஐம்பொன் சிலையாக இருக்கலாம் எனக் கூறப்படுவதால் தொல்லியல் துறை ஆய்வுக்குப் பின்னரே சிலை குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும். குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கோயில்கள் எதுவும் இல்லாத நிலையில் சிலை கிடைத்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுரேந்திர கோலி கடைசி வழக்கிலிருந்தும் விடுதலை - உடனடியாக விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பலத்த மழையை எதிா்கொள்ள மாநகராட்சி தயாா்: மேயா் ஆா்.பிரியா

பிகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை - வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

பட்டா வழங்க கோரி திருநங்கைகள் மனு

திருத்தணியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT