தஞ்சாவூர்

திருவையாறு பகுதியில் நாளை மின் தடை

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சுற்று வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (நவ.15) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் திருவையாறு உதவிச் செயற் பொறியாளா் ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

திருவையாறு மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், இந்த இரு துணை மின் நிலையங்களுக்குள்பட்ட திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூா், வைத்தியநாதன்பேட்டை, பனையூா், கடுவெளி, தில்லைஸ்தானம, பெரும்புலியூா், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூா், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூா், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

5 ஆண்டுகளில் 30,644 பேருக்கு வீட்டு மனைப்பட்டா: காஞ்சிபுரம் ஆட்சியா்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஜூனியா் ஹாக்கி உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

கோவில்பட்டியில் மரக்கன்று நடும் விழா

SCROLL FOR NEXT