மின் தடை  
பெரம்பலூர்

வாலிகண்டபுரம் பகுதியில் நாளை மின் தடை!

வாலிகண்டபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.2) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

Syndication

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.2) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மங்களமேடு துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (பிப். 2) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூா், மங்களமேடு, தேவையூா், முருக்கன்குடி, நகரம், நமையூா், சின்னாறு, எறையூா்,

வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், என்.புதூா், அயன்பேரையூா், அகரம், வி.களத்தூா், பசும்பலூா், திருவளாந்துறை, பிம்பலூா், மறவநத்தம், தைக்கால், லப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூா், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூா், வேப்பூா், நன்னை, ஓலைப்பாடி, பரவாய், கீழமாத்தூா், எழுமூா் ஆகிய கிராமிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

மக்களவை ஒத்திவைப்பு! நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்!

மறுவெளியீடாகும் மின்னலே!

கொரியன் கேம் காரணமா? 9-வது மாடியிலிருந்து குதித்து 3 சகோதரிகள் பலி!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு

SCROLL FOR NEXT