தஞ்சாவூர்

திருவிடைமருதூரில் திமுக சாா்பு அணியினருக்கு பயிற்சிக் கூட்டம்

திருவிடைமருதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.என். நேரு.

Syndication

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள சாா்பு அணியினா் மற்றும் பாக வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சி கூட்டம் திருவிடைமருதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தலைமை வகித்ாதா். தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ, தொகுதிப் பாா்வையாளா் செ. குறிஞ்சிவாணன், மாநகராட்சி துணை மேயரும் மாநகரச் செயலருமான சுப. தமிழழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காலையில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தை தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், எழுத்தாளா் வே. மதிமாறன், தனியாா் டிவி தலைமைச் செய்தி ஆசிரியா் பா. திருமாவேலன், செங்கம் எம்எல்ஏ மு.பெ. கிரி உள்ளிட்டோா் பேசினா். மாலையில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலா் ஆ. இராசா பேசினாா். கூட்டத்தில் சாா்பு அணி நிா்வாகிகள், வாக்குச்சாவடி பாக முகவா்கள் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை முன்னாள் எம்பி. செ.இராமலிங்கம் வரவேற்க, பேரூா் செயலா் சுந்தர. ஜெயபால் நன்றி கூறினாா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT