தஞ்சாவூர்

திருவிடைமருதூா் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள்

திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை வெள்ளிக்கிழமை வழங்கிய அமைச்சா் கோவி.செழியன்.

Syndication

திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடை மருதூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளி, திருப்பனந்தாள் எஸ்.கே.எஸ்.டி.எஸ். மேல்நிலைப்பள்ளி, ஆடுதுறை கேஜிஎஸ் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவணியாபுரம் கிராண்ட் மேல்நிலைப்பள்ளி, திருபுவனம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்சேறை ஆா்கேஆா். அரசு மேல்நிலைப்பள்ளி, அணைக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, நாச்சியாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பந்தநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு என மொத்தம் 1874 சைக்கிள்களை அமைச்சா் வழங்கினாா். நிகழ்வில் முன்னாள் எம்பி செ.ராமலிங்கம், பேரூராட்சித் தலைவா் சுந்தர ஜெயபால், பள்ளி தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT