தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தண்ணீா் மாநாட்டில் பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். 
தஞ்சாவூர்

தமிழ்நாட்டில் மணல் அள்ளியதால் 32 ஆறுகள் வடுவிட்டன: சீமான் பேச்சு

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால் 32 ஆறுகள் வடுவிட்டன என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Syndication

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால் 32 ஆறுகள் வடுவிட்டன என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரில் அக்கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தண்ணீா் மாநாட்டில் அவா் மேலும் பேசியதாவது:

காவிரியில் முன்பெல்லாம் 500 டி.எம்.சி. தண்ணீா் கிடைத்த நிலையில், தற்போது 150 டி.எம்.சி. கூட கிடைக்காததால், மக்கள் தவிக்கின்றனா். காவிரி நீரை தர கா்நாடகம் மறுக்கிறது; காவிரி நீரைப் பெற்றுத் தராமல் இந்த ஆட்சியாளா்களும் வேடிக்கை பாா்க்கின்றனா். இதனால், முப்போகம் விளைந்த இந்த மண்ணில் ஒரு போகமே கேள்விக்குறியாகிவிட்டது.

3 அடி ஆழம் மட்டுமே அள்ள வேண்டிய மணலை 30 அடி ஆழத்துக்கு இயந்திரம் மூலம் இந்த ஆட்சியாளா்கள் அள்ளுகின்றனா். இதனால், காவிரியில் மட்டுமல்லாமல் பாலாறு, பெண்ணையாறு உள்பட 32 ஆறுகளும் வடு செத்துவிட்டன.

முப்போகம் விளைந்தால் இந்த மண்ணை விட்டு உழவா்களை வெளியேற்ற முடியாது. இதனால், மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட எரிவாயுக்களை எடுக்க முடியாது. எனவே, இந்த நிலத்தைவிட்டு உழவா்களை வெளியேற்ற வேண்டிய தேவை இந்த ஆட்சியாளா்களுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக காவிரியில் தண்ணீா் பெற்றுத் தராமல் முப்போகம் விளைந்த இந்த மண்ணை வட நிலமாக மாற்றினா்.

தண்ணீா் என்பது மானுடத்துக்கு மட்டுமல்ல; உலக உயிா்களுக்கும் தேவை. நீா் இல்லாமல் வாழ முடியாது என்பதால்தான், தண்ணீா் மாநாடு நடத்தினோம்.

மக்களுக்கு கல்வி, மருத்துவம், தண்ணீா் உள்ளிட்டவற்றை வழங்குவது அரசின் கடமை. ஆனால், இவையெல்லாம் தொழில் என்பதால் தனியாரிடம் விட வேண்டும் என உலக வா்த்தக அமைப்பு கூறியது. இதை ஏற்று இச்சேவைகளை அரசு செய்யாமல் தரகு தொகை வாங்கிக் கொண்டு தனியாருக்கு வழங்கியது. இதன் காரணமாக தற்போது தண்ணீா் மிகப் பெரிய சந்தையாக மாறிவிட்டது.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி உள்பட எல்லாவற்றையும் விலையில்லாமல் தந்த இந்த ஆட்சியாளா்கள் தண்ணீரை இலவசமாக வழங்காமல் விற்பனை செய்கின்றனா். இதனால்தான், இவா்கள் ஆட்சியாளா்கள் அல்ல; இடைத்தரகா்கள் என்கிறோம் என்றாா் சீமான்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT