பேராவூரணியில் பைக் மோதி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பேராவூரணி பொன்காடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (58), பேராவூரணி மீன் மாா்க்கெட் தொழிலாளி. திங்கள்கிழமை இவா் இரவு இவா் ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்ற போது, அதே பகுதியைச் சோ்ந்த சக்தி மணிவேல் (23) ஓட்டி வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கண்ணன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.