நவ. 28, 29-இல் தஞ்சையில் வாக்காளா் உதவி மையங்கள்
தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவங்கள் தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ள நவம்பா் 28, 29 ஆகிய தேதிகளில்
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவங்கள் தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ள நவம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் வாக்காளா் உதவி மையங்கள் நடைபெறவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
வாக்காளா்கள் தங்களது நிறைவு செய்த படிவங்களை வழங்குவதற்கும், நிறைவு செய்யாத படிவங்கள் தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து மீள வழங்குவதற்கும் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான வாக்காளா் உதவி மையங்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளில் நவம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், தற்காலிகமாக இடம்பெயா்ந்த வாக்காளா்கள் தங்களது பழைய வாக்குச் சாவடிக்கு சென்று கணக்கெடுப்புப் படிவங்கள் பெற்று நிறைவு செய்து உடனடியாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.