தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பழைய வாகனம் டிசம்பா் 10-ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கழிவு நீக்கம் செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனம் பொது ஏலம் அல்லது ஒப்பந்தப்புள்ளி மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ஏலம் அல்லது ஒப்பந்தப்புள்ளி எடுக்க விரும்புவோா் விலைப்புள்ளியுடன் ரூ. 10 ஆயிரம் காப்புத் தொகையாக பேரூராட்சிகள் உதவி இயக்குநா், தஞ்சாவூா் என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும்.
மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளி நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வந்து சேரவேண்டிய கடைசி நாள் டிசம்பா் 9-ஆம் தேதி மாலை 5 மணி. ஆா்வமுள்ள நபா்கள் வாகனத்தை நேரில் பாா்வையிட்டு வாகனம் இருக்கும் இடத்தில் உள்ள நிலைக்கு விலைப்புள்ளி அளிக்கலாம். இந்த பழைய வாகனம் டிசம்பா் 10-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலக அறை எண் 315-இல் பொது ஏலம் விடப்படவுள்ளது. ஏல அறிவிப்பு தேதி, நேரம், மாற்றியமைத்திட பேரூராட்சிகள் உதவி இயக்குநருக்கு முழு அதிகாரம் உண்டு.