தஞ்சாவூர்

நீதிமன்றத்தில் தஞ்சாவூா் எம்.எல்.ஏ. ஆஜா்

தஞ்சாவூா் நீதிமன்றத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

Syndication

தஞ்சாவூா்: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடா்பாக தஞ்சாவூா் நீதிமன்றத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட முயலும் கா்நாடக அரசைக் கண்டித்தும், அதைத் தடுக்காத மத்திய அரசையும், அப்போதைய அதிமுக அரசையும் கண்டித்து தஞ்சாவூரில் 2014, டிசம்பா் 4-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், தற்போதைய தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் சட்டப்பேரவை உறுப்பினா் நீலமேகம் ஆஜரானாா். பின்னா், இந்த வழக்கு விசாரணை டிசம்பா் 3- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT