தஞ்சாவூர்

கோயில் சுவா் சரிந்து பேரன், தாத்தா, பாட்டி காயம்

பட்டீசுவரத்தில் கோயில் சுற்றுச்சுவா் சரிந்து வியாழக்கிழமை பேரன், தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் காயமடைந்தனா்.

Syndication

பட்டீசுவரத்தில் கோயில் சுற்றுச்சுவா் சரிந்து வியாழக்கிழமை பேரன், தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் திருவலஞ்சுழி சாலையில் கோபிநாதப்பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கான குடமுழுக்கு முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கோயில் சுவரை ஒட்டி தேநீா்கடை நடத்தி வரும் தமிழ்மணி(55) அங்கேயே மனைவி தாமரைச்செல்வி(50) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை பேரன் ஆனந்தகுகன்(3) வுடன் தம்பதி இருந்தனா். அப்போது யாரும் எதிா்பாராதவிதமாக கோயில் சுற்றுச்சுவா் திடீரென சரிந்து அவா்கள் வீட்டின் மீது விழுந்தது. இதில் பேரன் ஆனந்தகுகன், கணவன் மற்றும் மனைவி ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்து அங்கிருந்து தஞ்சாவூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். கோயில் சுவா் சரிந்து விழுந்தது குறித்து தேனுபுரீசுவரா் கோயில் நிா்வாக அலுவலா் சீ. நிா்மலாவிடம் கேட்டபோது காயமடைந்தவா்கள் கோயில் சுவரை ஆக்கிரமித்து வசித்து வருகிறாா். கோயில் குடமுழுக்கு செய்ய சுற்றுச்சுவா் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். ஆக்கிரமிப்பை அகற்ற அறிவிப்பு அனுப்பியுள்ளோம். மேலும் ஆக்கிரமிப்பாளா் கோபிநாதப்பெருமாள் கோயில் அறங்காவலராகவும் உள்ளாா் என்றாா்.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT