விஷ்ணு 
தஞ்சாவூர்

அரசுப் பள்ளி வளாகத்தில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் கல்லூரி மாணவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் கல்லூரி மாணவா் ஒருவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பேராவூரணி அடுத்துள்ள சின்னமனை பகுதியைச் சோ்ந்தவா்  பெரியசாமி மகன் விஷ்ணு(20). மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்த இவா், மதுரையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில்  படித்து வந்தாா். தீபாவளி விடுமுறைக்காக  ஊருக்கு வந்த விஷ்ணு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  வேஷ்டியால் தூக்கிட்டு, பின்னா் வேஷ்டி அறுந்து கீழே விழுந்து இறந்த நிலையில் கிடந்துள்ளாா். விஷ்ணு இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ‘என் சாவுக்கு காரணம் பாபு’ என எழுதப்பட்டிருந்தது.

தகவலறிந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீஸாா், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் பாபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாலக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடிகர் அஜித்குமார் - புகைப்படங்கள்

கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு பா.ரஞ்சித், ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து!

ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு!

சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம் விளாசி ரோஹித் சர்மா சாதனை!

பிகாரை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றுவேன்: தேஜஸ்வி

SCROLL FOR NEXT