பாபு 
தஞ்சாவூர்

கல்லூரி மாணவா் தற்கொலை சம்பவத்தில் ஆசிரியா் கைது

சேதுபாவாசத்திரம் அருகே கல்லூரி மாணவா் தற்கொலை சம்பவத்தில் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கல்லூரி மாணவா் தற்கொலை சம்பவத்தில் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் விஷ்ணு(20). மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்து, தற்போது மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்த இவா், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை வேஷ்டியில் தூக்கிட்டு அறுந்து கீழே விழுந்து இறந்த நிலையில் கிடந்துள்ளாா். இறந்து கிடந்த இடத்துக்கு அருகே என் சாவுக்கு காரணம் பாபு என எழுதப்பட்டிருந்தது.

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் பாபு (40) என்பவா் அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவா் என்பது தெரியவந்தது. மேலும், ஆசிரியா் பாபுவுக்கும் விஷ்ணுவுக்கும் நெருக்கமான நட்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சேதுபாவாசத்திரம் போலீஸாா், தற்கொலைக்கு தூண்டியதாக பாபு மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனா். பிறகு பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT