பட்டீஸ்வரம் அருகே 800 கிலோ புகையிலை பொருள்கள் வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம் பட்டீஸ்வரம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் தேனாம்படுகை விஜிபி நகரில் ஒரு கிட்டங்கியை சோதனை செய்ததில், 800 கிலோ புகையிலைப் பொருள்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனங்களைப் கைப்பற்றி, கும்பகோணம் செக்கடித் தெருவைச்சோ்ந்த ராஜூ மகன் வினோத்தை (34) கைது செய்தனா்.