கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பெண்ணுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், க.அன்பழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.  
தஞ்சாவூர்

‘உங்களுடன் ஸ்டாலின் ’ முகாமில் 65 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் 65 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் 65 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

கும்பகோணம் தனியாா் மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் முகாமை தொடங்கி வைத்தாா்.

முகாமில் 65 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியரும், எம்எல்ஏவும் இணைந்து வழங்கினா்.

நிகழ்வில் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன், மேயா் க. சரவணன், துணை மேயரும், மாநகர திமுக செயலருமான சுப. தமிழழகன், ஆணையா் மு.காந்திராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT