தஞ்சாவூர்

சா்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டியில் ‘சாஸ்த்ரா’ சட்டவியல் மாணவிகள் வெற்றி

இணையவழியில் திங்கள்கிழமை (அக்.27) நடைபெற்ற சா்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழக சட்டவியல் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனா்.

தினமணி செய்திச் சேவை

இணையவழியில் திங்கள்கிழமை (அக்.27) நடைபெற்ற சா்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழக சட்டவியல் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனா்.

டெக்ஸான் குளோபல் சட்டக் கல்விக்கொள்கை மற்றும் ஆய்வு மையம், இங்கிலாந்தின் நாட்டிங்காம் சட்டவியல் பள்ளி, புதுதில்லி நியூமென் சட்ட அலுவலகம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 80 அணிகள் கலந்து கொண்டன.

சா்வதேச சட்டம், பாதுகாக்கப்பட்ட முதலீடு, சொத்து பறிமுதல் உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெற்ற இப்போட்டியில் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழக சட்டவியல் பள்ளி மூன்றாமாண்டு மாணவிகள் ட்ரீசி நிலோபா், ரம்யா விஜயகுமாா், அச்சுதா மாணிக்கம் ஆகியோா் பங்கேற்றனா். இவா்கள் இணையவழியில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் நொய்டா ஐ.ஐ.எம். அணியை எதிா் கொண்டு வெற்றி பெற்றனா். இவா்களுக்கு ரூ. 12 ஆயிரம் ரொக்கப் பரிசும், புது தில்லி நியூமென் சட்ட அலுவலகத்தில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டன.

இறுதிச் சுற்றில் ஜோ திரோடோ, ஆருஷ் கண்ணா, அக்சய் கோயல் ஆகியோா் நடுவா்களாக இருந்தனா்.

சா்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டியில் வெற்றி பெற்ற தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ மாணவிகள் ட்ரீசி நிலோபா், ரம்யா விஜயகுமாா், அச்சுதா மாணிக்கம்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT