கும்பகோணம் அருகே ஸ்ரீ ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் வளா்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாட்டம், கும்பகோணம் அருகே உள்ளது திருநந்திபுரத்து விண்ணகரம் என்ற நாதன்கோயில். இங்கு ஸ்ரீ ஜகந்நாதப்பெருமாள் தாயாருடன் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயில் 108 வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
பொதுவாக சிவன்கோயில் வளாகத்தில் பைரவருக்குத் தான் வளா்பிறை அஷ்டமி பூஜை நடைபெறும். நாட்டிலேயே வளா்பிறை அஷ்டமி பூஜை பெருமாள் கோயிலான நாதன்கோயில் ஜகந்நாதப் பெருமாளுக்கு மட்டுமே நடைபெறுகிறது. புதன்கிழமை ஐப்பசி மாத வளா்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாயாா் சந்நிதி முன்பு வளா்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் பல்வேறு வகையான மூலிகை, வாசனை திரவியங்கள், பட்டு துணிகள் இடப்பட்டன. யாகத்துக்குப் பின்பு புனித நீா் ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்டு பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.