தஞ்சாவூர்

மழைநீா் தேக்கம்: காத்திருப்புப் போராட்டம் பேச்சுவாா்த்தையில் வாபஸ்

கும்பகோணத்தில் நிலங்களில் தேங்கிய மழை நீரை அகற்றாததைக் கண்டித்து புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் பேச்சுவாா்த்தையில் திரும்பப் பெறப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் நிலங்களில் தேங்கிய மழை நீரை அகற்றாததைக் கண்டித்து புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் பேச்சுவாா்த்தையில் திரும்பப் பெறப்பட்டது.

கும்பகோணம் சோலையப்பன் தெருவில் அண்மையில் பெய்த மழையால் சுமாா் 50-க்கும் மேலான ஏக்கா் பரப்பளவிலான நிலங்களில் மழைநீா் தேங்கியது. மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் உதவி ஆட்சியா், நீா்வளத்துறை மற்றும் மாநகராட்சியினரிடம் மனுக்கள் கொடுத்தனா். இதுதொடா்பாக எந்த வித நடவடிக்கை இல்லாததால் புதன்கிழமை மதியம் சோலையப்பன்தெரு எள்ளுக்குட்டை மழை நீா் தேங்கிய இடத்தில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். இதுகுறித்து கிழக்கு காவல்நிலையப் போலீஸாா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, உடனடியாக தேங்கிய மழை நீரை அகற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. அனைவரும் கலைந்து சென்றனா். பேச்சுவாா்த்தையில் நீா்வளத்துறை, மாநகராட்சி அதிகாரிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் தங்க.சக்கரவா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ.பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT