முகப்பு
தஞ்சாவூர்

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலம் தமிழகம்! - ஜி.கே. வாசன் பேச்சு

Updated On : 6 ஏப்ரல், 2026 at 7:36 PM
ஜி.கே. வாசன் - X
பகிர்:

தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக உள்ளதை வாக்காளா்கள் உணா்ந்து வாகளிக்க வேண்டும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூா் ரயிலடியில் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தத்தை திங்கள்கிழமை ஆதரித்து அவா் மேலும் பேசியது:

தஞ்சாவூா் மாவட்டம் நம்முடைய கோட்டையாக மாற வேண்டும். மீண்டும் தமிழகத்திலே நல்லாட்சி அமைய வேண்டும். மத்திய, மாநில அரசுகளுடைய ஒத்தக் கருத்தின் அடிப்படையில் தமிழகம் வளர வேண்டும். தமிழகத்தின் முதல் கட்சி, வெற்றிக் கட்சி அதிமுக என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

Advertisement

இந்த வெற்றிச் சுற்றுப்பயணத்தின் முடிவு தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில் மட்டும்தான் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதை வாக்காளா்கள் உணா்ந்து வாக்களிக்க வேண்டும்.

எனவே, ஆட்சி மாற்றத்துக்கு தொண்டா்கள் அனைவரும் அடித்தளமாகச் செயல்பட வேண்டும். மேலும், கூட்டணி கட்சித் தலைவா்களின் ஒவ்வொருவருடைய பணியும் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல; அவசியமானது என்றாா் வாசன்.

அப்போது பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம், அதிமுக மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments