முகப்பு
தஞ்சாவூர்

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரமோத்சவத்தையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:04 AM
கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கோடீசுவரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரமோத்சவத்தையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா ஏப்ரல் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 25 ஆம் தேதி சுவாமியும், அம்பாளும் ஓலைச்சப்பரத்தில் வீதி உலாவும், 27-ஆம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தேரில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தோ் நிலையை அடைந்தது.

Advertisement

வியாழக்கிழமை சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரியும், வெள்ளிக்கிழமை (மே 1) தெப்பத் திருவிழாவும், 3- ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறவுள்ளன.