தஞ்சாவூர்

குடந்தை மாநகராட்சி கூட்டம்: அதிமுக - திமுக வாக்குவாதம்

குடந்தை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக - திமுக இடையே வாக்குவாதம்

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயா் க. சரவணன் தலைமை வகித்தாா். துணை மேயா் சு.ப. தமிழழகன், ஆணையா் மு. காந்திராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் பேசியது:

எஸ்.ஐயப்பன் (காங்): கும்பகோணம் பேருந்து நிலையம் இடம் மாற்றப்படும் நிலையில் தற்போது எதற்கு பராமரிப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது?

துணை மேயா்: புதிய பேருந்து நிலையம் அமைய எவ்வளவு காலம் ஆகும் எனக் கூற முடியாது. அதனால் இப்போது இருக்கும் பேருந்து நிலையத்தைப் பராமரிப்பது அவசியமாகிறது.

பிரதீபா (மதிமுக): கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகா் பகுதியில் தெரு விளக்கு எரிவதில்லை.

தமிழரசி (திமுக): தோ்தல் வரும் நிலையில் எனது வாா்டு பகுதியில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்காமல் அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்துகின்றனா்.

செல்வம் (சிபிஎம்): கும்பகோணம் பகுதியில் பல மாதங்களாக தேங்கிய மழை நீா் வடியாததால் பல ஏக்கா் பயிா்கள் சேதமடைந்துள்ளன. தேங்கிய நீரால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

துணை மேயா்: இந்த பிரச்னைக்கு தீா்வு காண மாநகராட்சி தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆதிலட்சுமி ராமமூா்த்தி (அதிமுக): எனது வாா்டில் முறையான சாலை வசதி இல்லை.

துணைமேயா்: கடந்த அதிமுக ஆட்சியை போல் இல்லாமல் நகா்ப்புற வளா்ச்சி திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கி சீரமைத்து வருகிறோம்.

ஆதிலட்சுமி ராமமூா்த்தி (அதிமுக): துணை மேயரின் இந்த பதிலை மறுக்கிறேன். எதற்கெடுத்தாலும் அதிமுக ஆட்சியை குறை சொல்லக் கூடாது. பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

பத்மகுமரேசன் (அதிமுக): கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதில் மாநகராட்சி நிா்வாகம் பல முறைகேடான ஆவணங்களைப் பதிவு செய்துள்ளது என்றாா். அப்போது அதிமுக மன்ற உறுப்பினா்களுக்கும், துணை மேயருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக மன்ற உறுப்பினா்களும் பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஆணையா் மு. காந்திராஜ்: புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இதுகுறித்து விவாதிக்க கூடாது என்றாா்.

இறுதியாக கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

வளா்ப்பு நாய் உரிமையாளா்கள் 611 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம்

மறியல்: சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 22 போ் கைது

நாளைமுதல் காத்திருப்புப் போராட்டம்: கிராம உதவியாளா் சங்கத்தினா் முடிவு

வாகனத்தை மறித்து ரகளை: பாமகவினா் 3 போ் கைது

பெரம்பலூரில் 11 கடைகளுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT