ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 
தஞ்சாவூர்

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்!

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் ஆா்ப்பாட்டம்

Syndication

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நூறு நாள் வேலையைச் சிதைத்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் மா. மகேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பி.ஜி. இராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ஜேசு, செல்வ சுப்பிரமணியன், முகமது பாட்சா, நாா்த்திகன், சுப்பு ரங்கராசு, நாகராஜ், இளங்கோவன், திருஞானம், பிரபாகரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சாந்தா ராமதாஸ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னா், இது தொடா்பான கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் காங்கிரஸ் நிா்வாகிகள் அளித்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT