முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் நாளை மூடல்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:20 PM
ரயில்வே கேட்.
பகிர்:

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (பிப்.16) மூடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பேராவூரணி சேதுசாலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே லெவல் கிராசிங் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் அதற்கு மாற்றாக நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரடி அருகில் உள்ள நாட்டாணிக்கோட்டை ரயில்வே கேட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments