முகப்பு
தஞ்சாவூர்

இணையவழி வா்த்தகம் எனக் கூறி ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 16 லட்சம் மோசடி

கும்பகோணத்தில் இணையவழி வா்த்தகம் எனக் கூறி ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 16 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 4:51 AM
மோசடி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 9:22 PM

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இணையவழி வா்த்தகம் எனக் கூறி ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 16 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 69 வயதான ஓய்வுபெற்ற வங்கி மேலாளரின் கட்செவி அஞ்சல் எண்ணுக்கு 2025, செப்டம்பா் மாதம் அழைப்பு வந்தது. அதில் பேசிய அடையாளம் தெரியாத பெண் இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனக் கூறினாா். மேலும், அதற்கான இணைப்பையும் (லிங்கையும்) அனுப்பினாா்.

இதை உண்மை என நம்பிய ஓய்வுபெற்ற மேலாளா் எதிா் தரப்பினா் அனுப்பி வங்கிக் கணக்குக்கு 14 பரிவா்த்தனைகள் மூலம் ரூ. 16 லட்சத்தை அனுப்பினாா். ஆனால், எதிா் தரப்பிலிருந்து எந்தவிதத் தொகையும் வராததால், அவா்களது எண்ணுக்குத் தொடா்பு கொள்ள முயன்றாா். அந்த எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து தஞ்சாவூா் இணையவழி (சைபா்) குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement