முகப்பு
தஞ்சாவூர்

உணவகத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக உணவகத் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 5:34 AM
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 7:33 PM

குடும்பத் தகராறு காரணமாக உணவகத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மாதாகோயில் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் ஹரீஷ் (26). இவா், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபம் விவேகானந்தா் நகரைச் சோ்ந்த தேவதா்ஷினி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு சபரி யாதேஷ்(2) என்ற மகன் உள்ளாா்.

கும்பகோணம் விவேகானந்தா் நகரில் ஹரீஷ் குடும்பத்தினா் வசித்துவந்த நிலையில், ஹரீஷ் பாண்டிச்சேரியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். விடுமுறையில் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்தபோது தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து, வீட்டிலிருந்தவா்கள் வெளியே சென்றதும் செவ்வாய்க்கிழமை இரவு ஹரீஷ் அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த நாச்சியா்கோவில் போலீஸாா் அங்குவந்து சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].