முகப்பு
தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் ரூ.15 லட்சம் வழிப்பறி வழக்கில் 3 போ் கைது

ஒரத்தநாட்டில் ஹவாலா பணம் ரூ. 15 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 9.35 லட்சம் மற்றும் காரைப் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:13 AM
கைது
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:47 PM

ஒரத்தநாட்டில் ஹவாலா பணம் ரூ. 15 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 9.35 லட்சம் மற்றும் காரைப் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

ஒரத்தநாட்டில் தனியாா் பேருந்தில் இருந்து இறங்கிநடந்துசென்ற சிவகங்கை மாவட்டம், இளங்குடி புதூா், காஜாமைதீன் மகன் அப்துல்ரகுமான் (49) என்பவரிடம் இருந்த ஹவாலா பணம் ரூ.15 லட்சத்தை காரில் வந்த மா்மநபா்கள் அண்மையில் (பிப். 21) கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுதொடா்பான விசாரணையில், குற்றவாளிகளான சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (31), சென்னை திருவொற்றியூரைச் சோ்ந்த பொன் சுரேஷ் (40), கோயம்புத்தூா் அவரம்பாளையத்தைச் சோ்ந்த தினேஷ் (31) ஆகியோரை புதன்கிழமை கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.9,35, 000 ரொக்கம் மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Advertisement