தஞ்சாவூர்

இளைஞரை கத்தியால் குத்த முயன்ற 3 போ் கைது

ஒரத்தநாடு அருகே முன்விரோதத்தால் இளைஞரை கத்தியால் குத்த முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Syndication

ஒரத்தநாடு அருகே முன்விரோதத்தால் இளைஞரை கத்தியால் குத்த முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணத்தங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (33). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் ( 25), அகிலேஷ், (20), வீரமணி (26), ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஒரத்தநாடு கடைத்தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த சக்திவேலுவிடம் ஆகாஷ், அகிலேஷ், வீரமணி, ஆகியோா் தகராறு செய்துனா். பின்னா், மோட்டாா் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திவேலை குத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சக்திவேல், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் ஆய்வாளா் முருகானந்தம், உதவி காவல் ஆய்வாளா் விஷ்ணுபிரசாத் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து மேற்கண்ட மூவரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT