ஆருத்ரா தரிசனத்தையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமான்.  
தஞ்சாவூர்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றன.

Syndication

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றன.

இக்கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதியில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்பு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜ பெருமான் எழுந்தருளினாா். தொடா்ந்து, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் சுவாமி வீதி வலம் நடைபெற்றது.

சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் பெரிய கோயிலுக்கு திரும்பியபோது, மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக நெல் மணிகளை பக்தா்கள் மீது அா்ச்சகா்கள் தூவினா். இதை ஏராளமான பக்தா்கள் சேகரித்து சென்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT