ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்வுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முகமது கனி தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் அனுராதா முன்னிலை வகித்தாா். விழாவில் முதல்கட்டமாக 45 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் ரவி, பேரூராட்சி வாா்டு கவுன்சிலா் கமலக்கண்ணன், பேரூராட்சி முன்னாள் வாா்டு கவுன்சிலா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.