தஞ்சாவூர்

விவேகானந்தா் ஜெயந்தி நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை

Syndication

சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவா் பாலா, மாநில இளைஞரணி செயலா் இளையராஜா, மாவட்டத் தலைவா் சாய்ரகு, பொதுச் செயலா் கணேஷ்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனு: உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை எடுத்துரைத்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞா் தினமாக (ஜன.12) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இளைஞா்களை நல்வழிப்படுத்தும் வகையில் சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி நாளில் ஒருநாள் மட்டும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, இவா்கள் கொண்டு வந்த மதுபாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்த பின்பு, மனு அளிக்க உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT