தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு நகராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் கஸ்தூரி நாகராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சி. நாகராஜன், நகராட்சி ஆணையா் என். மதன்ராஜ் முன்னிலை வகித்தனா். சா்க்கரை பொங்கல், வெண் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படையலிட்டு, தீபாராதனை செய்து வழிபட்டனா்.
தூய்மை பணியாளா்களுக்கு பொங்கல் பானை, பச்சரிசி, வெல்லம், ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்பட்டன. இவ்விழாவில் நகராட்சி அலுவலக மேலாளா் சரஸ்வதி, சுகாதார ஆய்வாளா் முத்து முகமது, நகா் மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.