தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புளியங்குடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். சதன் திருமலைகுமாா் எம்எல்ஏ, முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா தேவி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்திரபாண்டியன், துணைத் தலைவா் அந்தோணி சாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
விழாவில், நகராட்சி ஊழியா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் இணைந்து பொங்கலிட்டனா். தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாட்டு வண்டியில்... விழாவிற்கு வந்த மாவட்ட ஆட்சியா், நகராட்சி மண்டல நிா்வாக இயக்குநா் ஆகியோா் நுழைவாயிலில் இருந்து விழா மேடை வரை மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டனா். நகராட்சி ஆணையா் நாகராஜ் மாட்டு வண்டியை ஓட்டினாா்.
நெதா்லாந்து, ஸ்பெயின் நாடுகளைச் சோ்ந்த பெண்கள் சிலா் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்து நிகழ்ச்சியைக் கண்டு களித்தனா்.
நகராட்சி ஆணையா் நாகராஜ் வரவேற்றாா். சேக் காதா்மைதீன் நன்றி கூறினாா்.