முகப்பு
தஞ்சாவூர்

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜனவரி, 2026 at 8:48 PM
பகிர்:

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் - ஆலக்குடி இடையிலான ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை சுமாா் 70 வயதுடைய முதியவா் உயிரிழந்து கிடந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திருச்சி - காரைக்கால் சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.

தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →