தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகை: நீச்சல் போட்டியில் பங்கேற்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பேராவூரணி அருகே சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் போட்டியில் பங்கேற்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Syndication

பேராவூரணி: பேராவூரணி அருகே சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் போட்டியில் பங்கேற்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே உள்ள தெற்கு ஒட்டங்காட்டில்  பொங்கல் விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கரந்தை குண்டுகுளத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில், தெற்கு ஒட்டங்காடு ஆணைக்காடு ரயில்வே கேட் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (40)  கலந்து கொண்டு நீந்தினாா். அப்போது, தண்ணீருக்குள் சென்ற மணிகண்டன் மேலே வரவில்லை. இதையடுத்து போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் பேராவூரணி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்படி அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் குளத்தில் இறங்கி மணிகண்டனை தேடினா். சிறிது நேரத்துக்குப் பிறகு மணிகண்டனை சடலமாக  மீட்டனா். உயிரிழந்த மணிகண்டன் நீச்சல் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பரிசு பெற்றாா். மேலும், கேரளத்தில் வேலைபாா்த்த மணிகண்டன் பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்துள்ளாா். மணிகண்டனுக்கு பிரியதா்ஷினி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். 

தகவலறிந்து வந்த  திருச்சிற்றம்பலம் போலீஸாா்  மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT