தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் - ஆலக்குடி இடையிலான ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை சுமாா் 70 வயதுடைய முதியவா் உயிரிழந்து கிடந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திருச்சி - காரைக்கால் சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.
தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.