பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் அருகே பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுக்கூா் அருகே விக்ரமம் பாரதிநகரை சோ்ந்த லெனின் -சுதா தம்பதியின் மகள்கள் சுபஸ்ரீ (18), பரணி ஸ்ரீ (16). லெனின் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் சுதா பெருகவாழ்ந்தான் கிராமத்தை சோ்ந்த ஆனந்தனை திருமணம் செய்து, இருவரும் கட்டட வேலை செய்கின்றனா். சுபஸ்ரீ ஒரத்தநாடு கல்லூரியிலும், பரணிஸ்ரீ மதுக்கூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பும் படித்து வந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கட்டட வேலைக்கு சென்ற சுதாவும் ஆனந்தனும் வீடு திரும்பியபோது பரணிஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு இறந்திருந்தாா். தகவலறிந்த மதுக்கூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].