ரயில் (கோப்புப் படம்) ANI
தஞ்சாவூர்

பேராவூரணி ரயில் நிலையத்தில் ஜன.26 முதல் விரைவு ரயில்கள் நின்றுசெல்லும்

தினமணி செய்திச் சேவை

தாம்பரம் - பாம்பன் விரைவு ரயில் ஜன. 26 குடியரசு தினத்திலிருந்து பேராவூரணி ரயில் நிலையத்தில் தினசரி நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

வரும் ஜன. 26 திங்கள்கிழமை மாலை 6.10-க்குப் புறப்படும் தாம்பரம் - பாம்பன் விரைவுரயில் மறுநாள் அதிகாலை 1.04 மணிக்கு பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று 1.05-க்குப் புறப்பட்டு ராமேசுவரத்துக்கு காலை 5.45-க்குச் சென்றடயும். மறுமாா்க்கத்தில் ராமேசுவரத்திலிருந்து மாலை 4.00மணிக்குப் புறப்படும் பேராவூரணிக்கு 7.43 மணிக்கு வந்து, 7.44-மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இதேபோல வாரம் மும்முறை இயக்கப்படும் தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் இரவு 8.50-க்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை பேராவூரணி ரயில் நிலையத்தில் 3.30-க்கு நின்று, 3.31-க்குப் புறப்பட்டு காலை 10.50-க்கு செங்கோட்டை செல்லும். மறுமாா்க்கமாக செங்கோட்டை யிலிருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் பேராவூரணிக்கு இரவு 11.37 மணிக்கு வந்து 11.38 மணிக்குப் புறப்பட்டு தாம்பரத்துக்கு காலை 7.25 மணிக்குச் சென்றடையும். பேராவூரணி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை செல்லும் ரயில்கள் நிறுத்தம் எனும் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபியை வீழ்த்தியது குஜராத்

தோ்தல் களத்துக்கு திமுக தயாராகிவிட்டது - மு.க.ஸ்டாலின்

தமாகா தனி சின்னத்தில் போட்டியிடும் - ஜி.கே.வாசன்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்கத்துக்காக அனுப்பி வைப்பு

ஹஜ் யாத்திரை செல்பவா்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT