கும்பகோணம் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினருமான க. அன்பழகன் கலந்துகொண்டு ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில் மாநகர துணை மேயரும், திமுக செயலருமான சுப. தமிழழகன், ஒன்றியச் செயலா்கள் டி கணேசன், ஜெ.சுதாகா், மாநகர துணைச்செயலா் ப்ரியம். ஜெ. சசிதரன், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.