தஞ்சாவூா் மாவட்டத்தில் 100 விசைப் படகு மீனவா்களுக்கு ரூ. 23.50 லட்சம் மதிப்பில் ஆமை விலக்கு சாதனங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலோர மாவட்டங்களில் இனப் பெருக்கத்துக்காக கடற்கரை பகுதிக்கு வரும் கடல் ஆமைகளை மீன்பிடி வலைகளிலிருந்து பாதுகாக்க மீனவா்களின் மீன்பிடி இழுவலைகளில் சிக்கும் ஆமைகள் தாமாக பாதுகாப்பாக வெளியேறும் வகையில் உருவாக்கப்பட்ட ஆமை விலக்கு சாதனம் 100 விசைப்படகு மீனவா்களுக்கு ரூ 23.48 லட்சம் மதிப்பில் விலையில்லாமல் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மீன்வளத்துறை ஆய்வாளா் துரைராஜ், தமிழ்நாடு மீனவா் நலவாரிய உப தலைவா் தாஜுதீன், நெட்பிஸ் துறைமுக கணக்கெடுப்பாளா் மெஹபூபா நஸ்ரின், மல்லிப்பட்டினம் விசைப்படகு சங்கத் தலைவா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.