பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை கீழத் தெருப் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள நடுவிக்கோட்டை கீழத்தெரு பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.
மேலும் சேதமடைந்த குடிதண்ணீா் தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீா் தொட்டி கட்டப்படும் என்று கூறியும், இதுவரை அமைக்கவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.