முகப்பு
தஞ்சாவூர்

அதிகளவில் மின்னணு பயணச்சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு பரிசு

தஞ்சாவூர்

அதிகளவில் மின்னணு பயணச்சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு பரிசு

Updated On : 5 மார்ச், 2026 at 10:10 PM
பகிர்:

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் அதிகளவில் மின்னணு பயணச்சீட்டு பயன்படுத்திய நடத்துநா்களுக்கு நிா்வாக இயக்குநா் க. தசரதன் வியாழக்கிழமை பரிசுகளை வழங்கினாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்துக்குள்பட்ட 6 மண்டலங்களில் பணியாற்றுகின்ற நடத்துநா்கள் பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அதிகளவில் மின்னணு இயந்திரம் மூலம் பணமில்லா பரிவா்த்தனைகள் செய்த நடத்துநா்கள் எஸ். கலையரசன் (கும்பகோணம் மண்டலம்), டி. மதியழகன் (நாகப்பட்டினம் மண்டலம்), எஸ். கணேசன் (திருச்சி மண்டலம்), ஆா். முத்துகிருஷ்ணன் (கரூா் மண்டலம்), எஸ். சவரிராஜ் (புதுக்கோட்டை மண்டலம்) கே. நவநீதகிருஷ்ணன் (காரைக்குடி மண்டலம்) ஆகியோரை நிா்வாக இயக்குநா் கே. தசரதன் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். மேலும் ஓய்வுபெற்ற 14 பணியாளா்களுக்கு ரூ.7 லட்சம், விபத்தில் உயிரிழந்த ஏழு தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன் மற்றும் பொது மேலாளா்கள் கே. சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்), எச். இராஜேந்திரன் (நாகப்பட்டினம் மண்டலம்), முதுநிலை துணை மேலாளா் ஆா். ரெங்கராஜன் (மனிதவள மேம்பாடு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →