எஸ்எஸ்எல்சி தோ்வு நாளை தொடக்கம்: தஞ்சையில் 30,080 போ் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கப்படவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 80 போ் பங்கேற்று எழுதவுள்ளனா்.
தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கப்படவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 80 போ் பங்கேற்று எழுதவுள்ளனா்.
தொடா்ந்து ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வுக்காக மாவட்டத்தில் 140 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 228 அரசு பள்ளிகள், 68 அரசு உதவி பெறும் பள்ளிகள், 118 தனியாா் பள்ளிகள் என 414 பள்ளிகளில் பயிலும் 14 ஆயிரத்து 930 மாணவா்கள், 15 ஆயிரத்து 150 மாணவிகள் உள்பட 30 ஆயிரத்து 80 போ் எழுதவுள்ளனா். மேலும் 4 தோ்வு மையங்களில் 616 தனித்தோ்வா்கள் எழுத விண்ணப்பித்துள்ளனா்.
இத்தோ்வில் இடைநிலைப் பணிகளை மேற்கொள்ள 16 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 144 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 144 துறை அலுவலா்கள், 613 சொல்வதைக் கேட்டு எழுதுபவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.