முகப்பு
தஞ்சாவூர்

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.46 லட்சம் பறிமுதல்

ஒரத்தநாடு அருகே தோ்தல் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 16 மார்ச், 2026 at 7:07 PM
பகிர்:

ஒரத்தநாடு அருகே தோ்தல் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாய் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். திங்கள்கிழமை ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் அருகில் வாகன தணிக்கையின்போது, சீவல் நிறுவனத்தின் வாகனத்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி 1 லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாய் கொண்டு செல்வது தெரியவந்தது.

இந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரி கனிமொழி தலைமையிலான குழுவினா் பறிமுதல் செய்து, ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி ரேணுகாதேவி மற்றும் தோ்தல் துணை அதிகாரி தா்மேந்திரா ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →