தீ விபத்தில் 5 வீடுகள் சேதம்
தஞ்சாவூரில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தஞ்சாவூரில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தஞ்சாவூா் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவா்கள் பெரும்பாலும் பள்ளிப் புத்தகப் பை, காலணி தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சரவணன், தனசேகரன், குமாா், பாண்டி, ராஜேந்திரன் ஆகியோரது வீடுகள் எரிந்தன. இதனால், 5 வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், காலணி தைக்கும் தளவாடப் பொருள்கள் உள்பட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று ஏறத்தாழ ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.