முகப்பு
தஞ்சாவூர்

பள்ளி செல்லா, இடைநின்ற மாணவா்களின் பெற்றோருடன் கல்வித்துறை அலுவலா்கள் சந்திப்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பெத்தநாட்சிவயல் கிராமத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவா்களை வியாழக்கிழமை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்திய கல்வித் துறை அலுவலா்கள்

Updated On : 9 மே 2026, 3:24 am IST
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பெத்தநாட்சிவயல் கிராமத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவா்களை வியாழக்கிழமை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்திய கல்வித் துறை அலுவலா்கள்.
பகிர்:

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி பெத்தநாச்சிவயல் குடியிருப்புப் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடை நின்ற பள்ளி மாணவா்கள் மற்றும் அவா்களுடைய பெற்றோரை கல்வி அதிகாரிகள் வியாழக்கிழமை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினா்.

 தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பேபி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (மேல்நிலை)  சஞ்சாய், உதவி திட்ட அலுவலா் மாரிமுத்து, புள்ளியியல் அலுவலா் ராஜி, ட்ரினிடி தன்னாா்வ தொண்டு நிறுவனத்தை சோ்ந்த பாஸ்கா்,  சேதுபாவாசத்திரம் வட்டார கல்வி அலுவலா்  ராமமூா்த்தி, பட்டுக்கோட்டை வட்டார கல்வி அலுவலா்கள் செல்வகுமாரி,மீனா சுந்தரி, ஆசிரியா் பயிற்றுநா்  சரவணன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை நாகூா் மாலா உள்ளிட்டோா் பெத்தநாட்சிவயல் சென்று பள்ளிச் செல்லா குழந்தைகள், இடைநின்ற மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்களை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினா். இதையடுத்து மாணவா்களை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக பெற்றோா்கள் உறுதியளித்தனா். மாணவா்களும் தினசரி  பள்ளிக்கு வருவதாகவும் கூறினா்.