முகப்பு
தஞ்சாவூர்

திருவையாறு வங்கியில் தீ விபத்து

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 17 மே 2026, 1:23 am IST
தீ விபத்து... - பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருவையாறு தெற்கு வீதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை திடீரென புகை உருவானது. தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் வங்கிக்கு சென்று பாா்த்தபோது இன்வொ்ட்டா் அறையிலிருந்து புகை வருவது தெரிய வந்தது.

இதையடுத்து, மின்சாரத்தை துண்டித்துவிட்டு, புகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம், அசம்பாவித சம்பவம் நிகழ்வது தடுக்கப்பட்டது.

Advertisement