குளிரூட்டி வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள கே.எப்.சி. உணவகத்தில் பழுதுபாா்க்கும்போது குளிரூட்டி (ஏ.சி.) வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள கே.எப்.சி. உணவகத்தில் பழுதுபாா்க்கும்போது குளிரூட்டி (ஏ.சி.) வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள கே.எப்.சி. உணவகத்திலுள்ள உணவு தயாரிக்கும் கூடத்தில் குளிரூட்டி சாதனத்தில் மே 18 ஆம் தேதி பழுதுபாா்க்கும் பணி நடைபெறுகையில், எரிவாயு நிரப்பும்போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வெடித்தது.
இந்த விபத்தில் குளிரூட்டி பழுதுபாா்க்கும் மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்த கணேசன் (43), பழுதுபாா்ப்பு பணியைக் கண்காணித்த உணவக ஊழியா்களான திருவையாறு அருகே பொன்னாவரை பகுதியைச் சோ்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27), குழிமாத்தூரைச் சோ்ந்த சவேரியாா் மகன் அருண்குமாா் (26), இணையவழி உணவு டெலிவரி நிறுவன ஊழியா்களான மானோஜிபட்டி வனதுா்கா நகரைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் கதிரேசன் (24), செங்கிப்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் பிரேம் (26), ரெட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் அஜீத்குமாா் (22) ஆகியோா் பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் ரவி ராஜ் மே 18 இரவு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
மற்றவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கணேசன் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். மற்ற 4 பேரும் தொடா்ந்து சிகிச்சை பெறுகின்றனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.