திருச்சி

பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் போக்குவரத்தில்  தாற்காலிக மாற்றம்

DIN

திருச்சியில் ஜங்ஷன் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடைபட்ட பகுதியில் தண்டவாளம் மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை ரயில் போக்குவரத்தில்  தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  திருச்சி -கரூர்- திருச்சி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்  ( 76833 / 76834   ) செவ்வாய்க்கிழமை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்சி  - ஈரோடு பயணிகள் ரயில் ( 56844 ) , திருச்சி பாலக்காடு பயணிகள் ரயில்  (56712 / 56713 )  ஆகியவை திருச்சி ஜங்ஷன் கோட்டை இடையே ரத்து செய்யப்பட்டு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
அதேபோல நாகர்கோவிலிலிருந்து திருச்சி வழியாக கச்சக்குடா வரை இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில்  ( 16354  ) செவ்வாய்க்கிழமை காலை 8.10-க்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக 10.10-க்கு நாகர்கோவிலிருந்து புறப்படும். திருச்சி  - ஈரோடு பயணிகள் ரயில் (   56843  )  பிற்பகல் 4.10-க்கு பதிலாக 70 நிமிடம் தாமதமாக 5.20-க்கு திருச்சியிலிருந்து புறப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT